மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்களை தேடி மருத்துவ முகாம்

திருச்சி, டிச.24: திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்களை தேடி மருத்துவ முகாமில் ஏராளமானோர் பயன் அடைந்தனர். திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஒவ்ெவாரு வாரமும் 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பல்ேவறு கோரிக்கை மனுக்களுடன் வருகின்றனர். இவர்களுக்கு அவசர முதலுதவி சிகிச்சைக்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளது.

இருப்பினும் நேற்று திருச்சி மாவட்ட கலெக்டர் அலுலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்திற்கு வருகை தந்த மக்களுக்கு மக்களை தேடி மருத்தும் மற்றும் தேசிய காசநோய் ஒழிப்பு திட்டத்தின் கீழ் மருத்துவ குழுவினர் நடமாடும் பரிசோதனை வாகனம் மூலம் மனு அளிக்க வந்த பொதுமக்களுக்கு பரிசோதனை செய்தனர். அதில் மக்களை தேடி மருத்துவத்தில், சுமார் 50க்கும் மேற்பட்டவர்களுக்கு உடல் எடை, உயரம், இரத்த அழுத்தம், இதய துடிப்பு உள்ளிட்ட அடிப்படை பரிசோதனை செய்யப்பட்டது. காசே நோய் தடுப்பு நடமாடும் பரிசோதனை வாகனம் மூலம் மொத்தம் 39 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது.

அதில் 12 பேருக்கு அவர்களுடைய சளி காசநோய் மாதிரி சோதனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. முதல்கட்ட பரிசோதனையில் 5 நபர்களுக்கு ஹை ரிஸ்க் நிலையில் உள்ளதால், சளி மாதிரிகளின் முடிவுகள் வந்த பிறகு தான் அவர்களுக்கு காச நோய் பாதிப்பு எந்த அளவிற்கு உள்ளது என்பது தெரியும் என்றும் அதன் மேற்பார்வையாளர் டேவிட் கூறினார்.

The post மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்களை தேடி மருத்துவ முகாம் appeared first on Dinakaran.

Related Stories: