புதுக்கோட்ைட,டிச.24: புதுக்கோட்டை சாந்தநாதபுரத்தை சேர்ந்த மாநகர திமுக செயலர் செந்தில் (55) நேற்று காலை மாரடைப்பால் காலமானார். இவரது மனைவி திலகவதி, புதுக்கோட்டை மாநகராட்சி மேயராக உள்ளார். இவருக்கு இரு மகன்கள் உள்ளனர்.
திமுக செயலர் செந்தில், நேற்று காலை வழக்கம்போல நடைப்பயிற்சியை முடித்துவிட்டு வீடு திரும்பியவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதால், ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். அவரது உடலுக்கு தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர். மெய்யநாதன், வடக்கு மாவட்ட செயலாளர் செல்லப்பாண்டியன், எம்பி அப்துல்லா, தஞ்சாவூர் எம்பி முரசொலி மற்றும் எம்எல்ஏக்கள் முத்துராஜா, சின்னத்துரை மற்றும், திமுக பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தினர்.
அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், நகர செயலாளர் அப்துல் ரகுமான், பாஸ்கர் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். மற்றும் தொழிலதிபர்கள், வியாபாரிகள், பொதுமக்கள் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர். மற்றும் அனைத்துக் கட்சிப் பிரமுகர்களும், பொதுநல அமைப்பினரும் அஞ்சலி செலுத்தினர். தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளனர். இன்று (24ம்தேதி) காலை முற்பகலில் இறுதிச் சடங்குகள் நடைபெறவுள்ளன.
The post புதுக்கோட்டை திமுக மாநகர செயலர் செந்தில் காலமானார் appeared first on Dinakaran.