நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அத்தியாவசிய பணிகளை செய்ய அனுமதி வேண்டும்: கவுன்சிலர்கள் மனு

 

விருதுநகர், டிச.24: வெம்பக்கோட்டை ஒன்றியத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அத்தியாவசிய பணிகளை செய்ய அனுமதி வழங்க வேண்டும் என ஒன்றிய தலைவர் தலைமையில் அதிமுக கவுன்சிலர்கள் மனு அளித்தனர். வெம்பக்கோட்டை ஒன்றிய தலைவர்கள் பஞ்சவர்ணம் கணேசன் தலைமையில் அதிமுக கவுன்சிலர்கள் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மனு அளித்தனர். மனுவில், வெம்பக்கோட்டை ஒன்றியத்தில் பொது நிதி ரூ.5.44 கோடி உள்ளது.

கலெக்டர் தெரிவித்த பணிகள் உள்பட ரூ.89 லட்சம் மதிப்பிலான பணிகளுக்கு 2 மாதத்திற்கு முன் அறிவிப்பு விடப்பட்டு, கடந்த வாரம் டெண்டர் திறக்கும் போது பணியை நிறுத்த அதிகாரிகள் உத்தரவு பிறப்பித்தனர். தெருவிற்குள் நடந்து செல்லமுடியாத அளவிற்கு தெருச்சாலைகள் சேறும், சகதியாக உள்ளன. மக்களுக்கான அத்தியாவசியமான அடிப்படை பணிகளை செய்வதற்கான டெண்டரை திறந்து பணிகள் நடக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர்.

The post நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அத்தியாவசிய பணிகளை செய்ய அனுமதி வேண்டும்: கவுன்சிலர்கள் மனு appeared first on Dinakaran.

Related Stories: