மதுரை, டிச. 24: மதுரையில் நேற்று அதிகாலையில் ஒரு மணி நேரமாக பரவலான மழை பெய்தது. தொடர்ந்து சில இடங்களில் தூறலும், நேற்று மாலை வரையிலும் வானம் மேகமூட்டமாக இருந்தது. மதுரை நகர் பகுதிகளான கீழமாசி வீதி, கோரிப்பாளையம், தல்லாகுளம், பெரியார் பஸ்ஸ்டாண்ட் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. மதுரை வெற்றிலைப்பேட்டை பகுதியில் மழை நீர், சாலைகளில் சூழ்ந்ததால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்குள்ளாகினர்.
மேலும் பல்வேறு பகுதிகளிலும் பரவலான மழை பெய்த நிலையில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு செல்லக்கூடிய மாணவர்கள் மழையில் நனைந்தபடி செல்லும் நிலை ஏற்பட்டது. மாநகராட்சியினர் தண்ணீர் தேங்கிய பகுதிகளில், உறிஞ்சு வாகனம் உள்ளிட்டவைகளால் தண்ணீரை உறிஞ்சி எடுத்து மழைநீர் தேங்காதவாறு அகற்றுவது உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டனர்.
The post மாமதுரையை நனைத்த திடீர் மழை appeared first on Dinakaran.