ஒட்டன்சத்திரத்தில் காங்கிரஸ் கிராம கமிட்டி நிர்வாகிகள் கலந்தாய்வு

 

ஒட்டன்சத்திரம், டிச. 24: ஒட்டன்சத்திரத்தில் திண்டுக்கல் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கிராம கமிட்டி சார்பில் நகர, பேரூர், வார்டு கமிட்டி நிர்வாகிகள் நியமன கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் சதீஷ் குமார் தலைமை வகித்தார். மண்டல பொறுப்பாளர்கள் பேங்க் சுப்பிரமணி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.எம்.பழனிச்சாமி, தொகுதி பொறுப்பாளர்கள் கருணாகரன், பிரபாகரன் சிறப்புரையாற்றினார். கூட்டத்தில் கட்சி நிர்வாகிகளுக்கு 2026 சட்டமன்ற தேர்தலில் பணியாற்றுவது குறித்து பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டன.

இதில் பொதுக்குழு உறுப்பினர் சிவசக்தி வேல், மாவட்ட துணை தலைவர் ரகுமான் சேட், மாவட்ட நிர்வாகிகள் முருகேசன், எத்திராஜ், வேலுச்சாமி, ஜாகிர் உசேன், நகர்மன்ற உறுப்பினர் முகமதுமீரான், வட்டார தலைவர்கள் அஸ்ரப்அலி, தர்மன் கருப்புச்சாமி, பாலு, சோலைராஜ், ராஜரத்தினம், பழனிச்சாமி, நகர தலைவர்கள் காளிமுத்து, ஆனந்த வெங்கேடசன், சிறுபான்மைபிரிவு மாவட்ட தலைவர் தர்வேஸ், ஊரட்சி மன்ற துணை தலைவர் சுரேஸ்குமார், நிர்வாகிகள் அய்யாவு, பிச்சை முத்து உள்பட பலர் கலந்து கொண்டனர். காமராஜர் கல்வி அறக்கட்டளையின் கீழ் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது.

The post ஒட்டன்சத்திரத்தில் காங்கிரஸ் கிராம கமிட்டி நிர்வாகிகள் கலந்தாய்வு appeared first on Dinakaran.

Related Stories: