அம்பேத்கர் குறித்து சர்ச்சை கருத்து அமித்ஷா பதவி விலக கோரி வரும் 30ல் கம்யூ. போராட்டம்

புதுடெல்லி: மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், சிபிஐ (எம்எல்) லிபரேஷன், ஆர்எஸ்பி மற்றும் அகில இந்திய பார்வேர்டு பிளாக் உள்ளிட்ட இடதுசாரி கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் நடந்தது. இதில், மார்க்சிஸ்ட் பொலிட்பீரோ ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ் காரத், இந்திய கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் டி.ராஜா, சிபிஐ (எம்எல்) லிபரேஷன் கட்சியின் பொதுச் செயலாளர் தீபங்கர் பட்டாச்சார்யா, ஆர்எஸ்பி பொதுச் செயலாளர் மனோஜ் பட்டாச்சார்யா, ஏஐஎப்பி பொதுச் செயலாளர் தேவராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து நேற்று வெளியிடப்பட்ட அறிக்கையில், ‘அரசியல் மற்றும் மக்கள் பிரச்னைகளில் இடதுசாரிகளின் தலையீட்டை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அம்பேத்கர் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பதவி விலக வலியுறுத்தி வரும் 30ம் தேதி நாடு தழுவிய போராட்டம் நடத்தப்படும். தேர்தல் விதி திருத்தத்தை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்’ என வலியுறுத்தப்பட்டுள்ளது.

The post அம்பேத்கர் குறித்து சர்ச்சை கருத்து அமித்ஷா பதவி விலக கோரி வரும் 30ல் கம்யூ. போராட்டம் appeared first on Dinakaran.

Related Stories: