அப்போது அவர் பேசியதாவது: நீங்கள் என்னை கிறிஸ்தவன் என்று நினைத்தால் நான் கிறிஸ்தவன், இந்து என்று நினைத்தால் இந்து, முஸ்லிம் என்று நினைத்தால் முஸ்லிம். அனைவருக்கும் பொதுவானவன் நான். அரசியலமைப்பிற்கு எதிராக பேசியுள்ள நீதிபதி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தும் தீர்மானத்திற்கும் கூட ஆதரவளிக்காத அதிமுகவிற்கு மக்கள் பாடம் புகட்ட வேண்டும். பாஜ கொண்டு வந்துள்ள ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற திட்டத்திற்கும் அதிமுக ஆதரவளித்துள்ளது. இதன் மூலம் அவர்கள் கூட்டணி வலுவாக உள்ளது என்று தெரிகிறது.
இனிமேல் பாஜவுடன் அதிமுக கள்ளக்கூட்டணி என்று சொல்ல தேவையில்லை. நல்ல கூட்டணியாகவே மக்கள் எடுத்துக் கொண்டார்கள். எல்லாருக்கும் தெரியும் நல்ல கூட்டணியாகவே அது அமைந்திருக்கிறது. சமீபத்தில் நடந்த அதிமுக பொதுக்கூட்டத்தில் பாஜவை எதிர்த்து, விமர்சித்து ஒரு தீர்மானம் கூட இல்லை. இவ்வாறு அவர் பேசினார். விழாவில் தயாநிதி மாறன் எம்.பி, மேயர் பிரியா, பீட்டர் அல்போன்ஸ், சட்டமன்ற உறுப்பினர் தாயகம் கவி மற்றும் பகுதி செயலாளர்கள் ராஜசேகர், முரளி, மண்டல குழு தலைவர் ஸ்ரீராமுலு, மாமன்ற உறுப்பினர் பரிமளம், தலைமை செயற்குழு உறுப்பினர் விஜயகுமார், நிர்வாகிகள், உறுப்பினர்கள், மகளிர் அணியினர், பொதுமக்கள், கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
The post கள்ளக்கூட்டணி என்று சொல்ல தேவையில்லை பாஜவுடன் அதிமுகவுக்கு நல்ல கூட்டணிதான்: உதயநிதி ஸ்டாலின் பேச்சு appeared first on Dinakaran.