அதேநேரம் டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் முதல்வர் வேட்பாளரை அறிவிப்பதில் பாஜக தடுமாற்றத்தை சந்தித்து வருகிறது. இந்த மாத இறுதிக்குள் கட்சி தனது தொகுதி வேட்பாளரின் பெயரை இறுதி செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து டெல்லி பாஜக மூத்த தலைவர்கள் கூறுகையில், ‘டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில், முதல்வர் வேட்பாளரின் பெயரை குறிப்படாமல் தேர்தலை எதிர்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. இந்த மாத இறுதிக்குள் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்களை இறுதி செய்யப்படும். டெல்லியின் 70 தொகுதிகளிலும் பாஜக போட்டியிடுகிறது. மாநிலத் தேர்தல் கமிட்டி தனது வேட்பாளர் பட்டியலைத் தயாரித்த பிறகு, அது மத்திய தேர்தல் கமிட்டியின் முன் கொடுக்கும்.
இந்த மாத இறுதிக்குள் மத்திய தேர்தல் குழு கூடும். பின்னர் 70 வேட்பாளர்களின் பட்டியல் இறுதி செய்யப்பட்டு அறிவிக்கப்படும். இந்த தேர்தலில் முதல்வர் வேட்பாளர் யார் என்பதை அறிவிக்கும் திட்டம் இல்லாததால், புதுடெல்லி தொகுதியில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக வலுவான வேட்பாளரை நிறுத்த உள்ளோம். இந்த தொகுதியில் காங்கிரஸ் சார்பில் சந்தீப் தீட்சித் போட்டியிடுகிறார். கெஜ்ரிவால் அரசின் ஊழல் குற்றச்சாட்டுகளை மக்கள் மன்றத்தில் முன்வைத்தும், ஆம்ஆத்மி அரசின் வாக்குறுதிகள் நிறைவேற்றாதது குறித்தும் மக்களிடம் எடுத்து செல்வோம்’ என்றனர். பாஜக முதல்வர் வேட்பாளரை அறிவிக்காமல் உள்ளதால், அக்கட்சி தோல்வி பயத்தில் உள்ளதாக ஆம்ஆத்மி தலைவர்கள் விமர்சித்து வருகின்றனர்.
The post டெல்லியில் பிப்ரவரியில் பேரவை தேர்தல் முதல்வர் வேட்பாளரை அறிவிக்காமல் தேர்தலை எதிர்கொள்ள பாஜக முடிவு: ஆம்ஆத்மி தலைவர்கள் கடும் விமர்சனம் appeared first on Dinakaran.