நாடாளுமன்றத்தில் பெண் எம்பிக்கள் மிரட்டப்படும் சூழலை உருவாக்கி விட்டனர்: கனிமொழி எம்பி பேட்டி

சென்னை: திமுக எம்.பி. கனிமொழி நேற்று முன்தினம் டெல்லியில் இருந்து விமானத்தில் சென்னை வந்தார். விமான நிலையத்தில் அவர் அளித்த பேட்டி: உள்துறை அமைச்சர் அமித்ஷா அம்பேத்கரை பற்றி தரக்குறைவாக பேசி இருப்பதை எதிர்த்து இந்தியா கூட்டணி கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தோம். ராகுல் காந்தி தடுக்கப்பட்டு அனுமதி மறுக்கப்பட்டது. தள்ளுமுள்ளு ஏற்பட்டது. போராடிக் கொண்டு இருந்த பெண்களும் தள்ளிவிடப்பட்டார்கள். போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரும் மிரட்டப்படும் சூழலை உருவாக்கி இருக்கிறார்கள் என்றார்.

The post நாடாளுமன்றத்தில் பெண் எம்பிக்கள் மிரட்டப்படும் சூழலை உருவாக்கி விட்டனர்: கனிமொழி எம்பி பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: