இதுகுறித்து மதுரை மாநகர் மகளிர் காவல்நிலையத்தில் சம்பந்தப்பட்ட குடும்பத்தினர் புகார் அளித்தனர். இதுகுறித்து விசாரணைக்கு ஆஜராகுமாறு உதவி ஜெயிலருக்கு மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் உத்தரவிட்டார். அங்கு விசாரணைக்கு தாய், மகள் மற்றும் குடும்பத்தினர் வந்திருந்தனர். உதவி ஜெயிலரும் விசாரணைக்கு ஆஜரானார். அப்போது உடன் வந்த இளம்பெண் ஒருவர், உதவி ஜெயிலரின் முகத்தில் சரமாரியாக அறைந்தார். இதனை அங்கிருந்த பொதுமக்கள் வீடியோ எடுத்து இணையதளத்தில் வெளியிட்டனர். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. ஏற்கனவே உதவி ஜெயிலர் மீது பல்வேறு புகார்கள் உள்ளதாக கூறப்படுகிறது.
The post சிறுமியிடம் சில்மிஷம் செய்ததாக புகார் மதுரை உதவி ஜெயிலருக்கு இளம்பெண் பளார்…பளார்: இணையத்தில் வீடியோ வைரல் appeared first on Dinakaran.