சென்னை: சவுதி அரேபியாவின் தமாம் பெருநகரிலிருந்து, ஐதராபாத்துக்கு 174 பயணிகளுடன் நேற்று காலை இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் சென்று கொண்டு இருந்தது. காலை 8 மணி அளவில், அந்த விமானம் ஐதராபாத்தில் தரையிறங்க முயன்ற போது, அங்கு மோசமான வானிலை நிலவியது. இதை அடுத்து இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் ஐதராபாத்தில் தரை இறங்க முடியவில்லை. உடனடியாக ஐதராபாத் விமான நிலைய கட்டுப்பாட்டு அதிகாரிகள், அந்த விமானத்தை சென்னைக்கு திருப்பி அனுப்பினர். அதன்படி அந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், 174 பயணிகளுடன் நேற்று காலை 8.50 மணி அளவில், சென்னை விமான நிலையத்தில் தரையிறங்கியது.
The post மோசமான வானிலை ஐதராபாத் விமானம் சென்னை வந்தது appeared first on Dinakaran.