கருங்கல், டிச.21: கிள்ளியூர் பேரூராட்சிக்கு உள்பட்ட 1வது வார்டு பகுதியான குருவிவிளையில் இருந்து வேப்புவிளை செல்லும் சாலை பல வருடங்களாக சீரமைக்கப்படாமல் பழுதடைந்து குண்டும், குழியுமாக காணப்பட்டது. இந்த சாலையை சீரமைத்து தர வேண்டும் என்று பொதுமக்கள் பேரூராட்சி தலைவரிடம் கோரிக்கை வைத்து வந்தனர். இதையடுத்து சாலை அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணி தொடங்கியது. இந்த பணியினை கிள்ளியூர் பேரூராட்சி தலைவர் ஷீலா சத்யராஜ் தொடங்கி வைத்தார். துணைத்தலைவர் சத்தியராஜ், 1வது வார்டு உறுப்பினர் சந்திர கலாதரன் உள்பட ஊர் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
The post கிள்ளியூர் பேரூராட்சியில் சாலை சீரமைப்பு பணி தொடக்கம் appeared first on Dinakaran.