இன்டர்கான்டினென்டல் கால்பந்து கோப்பையை வென்று ரியல் மாட்ரிட் அபாரம்: மெக்சிகோவின் பச்சுகா தோல்வி

லுசெய்ல்: கத்தாரில் நடந்த இன்டர்கான்டினென்டல் கால்பந்து கோப்பைக்கான இறுதிப் போட்டியில் மெக்சிகோவின் பச்சுகா அணியை 3-0 கோல் கணக்கில் அபாரமாக வென்ற ஸ்பெயினின் ரியல் மாட்ரிட் அணி கோப்பையை கைப்பற்றியது. இந்த போட்டியில் மோதிய ரியல் மாட்ரிட்- பச்சுகா அணிகள் பலம் வாய்ந்தவையாக இருந்ததால் ஆரம்பம் முதல் போட்டி விறுவிறுப்பாக இருந்தது. முதல் 36 நிமிடங்களுக்கு எந்த அணியாலும் கோல் போட முடியவில்லை.

இருப்பினும், போட்டியின் 37வது நிமிடத்தில் ரியல் மாட்ரிட் அணியின் நட்சத்திர வீரர்களில் ஒருவரான கைலியன் எம்பாப்பே அற்புதமாக கோலடித்து அணிக்கு முன்னிலை பெற்றுத் தந்தார். அதன் பின் முதல் பாதியில் கோல் விழவில்லை. ஆட்டத்தின் பிற்பாதியில் ரோட்ரிகோ மேலும் ஒரு கோல் அடித்து அணியை பலப்படுத்தினார்.

84வது நிமிடத்தில் அதிரடி வீரர் வினிசியஸ் ஜூனியர் பெனால்டி கார்னர் வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்தி 3வது கோல் அடித்தார். இதனால், 3 கோல்களுடன் ரியல் மாட்ரிட் வலுவான நிலையில் இருந்தது. அதன் பின்னரும் பச்சுகா அணியால் கோல் அடிக்க முடியவில்லை. இதையடுத்து 3-0 கோல் கணக்கில் ரியல் மாட்ரிட் அணி வென்று கோப்பையை கைப்பற்றியது.

The post இன்டர்கான்டினென்டல் கால்பந்து கோப்பையை வென்று ரியல் மாட்ரிட் அபாரம்: மெக்சிகோவின் பச்சுகா தோல்வி appeared first on Dinakaran.

Related Stories: