பைக் மீது காட்டுப்பன்றி மோதி தொழிலாளி பலி

சிவகங்கை, டிச. 19:இளையான்குடி அருகே காட்டு பன்றி டூவீலர் மீது மோதியதில் பேக்கரி தொழிலாளி பலியானார். இளையான்குடி அருகே முட்டக்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் சோலைமலை மகன் பாரதி(45). இவர் பரமக்குடியில் உள்ள பேக்கிரியில் பணிபுரிந்து வந்துள்ளார். இவர் கடந்த 16ம் தேதி அதிகாலை பரமக்குடிக்கு டூவீலரில் சென்றுள்ளார்.

அப்போது உப்புக்கேணி பகுதியில் செல்லும் பொழுது காட்டுப் பன்றி குறுக்கே வந்துள்ளது. டூவீலர் மீது பன்றி மோதியதில் பாரதி கீழே விழுந்து பலத்த காயமடைந்தார். பரமக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் உயிரிழந்தார்

The post பைக் மீது காட்டுப்பன்றி மோதி தொழிலாளி பலி appeared first on Dinakaran.

Related Stories: