ஷாருக்கானுடன் டேட்டிங்கில் இருந்தது உண்மைதான்: பிரியங்கா சோப்ரா பகீர்

மும்பை: நடிகை பிரியங்கா சோப்ரா, ‘லவ் அகெய்ன்’ என்ற படத்தில் நடித்துள்ள நிலையில் அந்த படம் நேற்று வெளியானது. இந்த நிலையில் ‘லவ் அகெய்ன்’ என்ற டைட்டிலுக்கு ஏற்ப தனது பழைய டேட்டிங் நண்பர்கள் குறித்து சமீபத்தில் பேட்டி ஒன்றில் அவர் கூறியுள்ளார். பாலிவுட் நடிகர்கள் ஷாஹித் கபூர், ஹர்மான் பவேஜா, ஷாருக்கான் ஆகியோர்களுடன் தான் டேட்டிங்கில் இருந்ததாகவும் டேட்டிங்கில் இருந்த அனைவருமே மிகவும் நல்லவர்கள் என்றும் கூறினார். ஆனால் அதே நேரத்தில் அந்த உறவு தொடர முடியாததற்கு பல்வேறு காரணங்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.

குறிப்பாக, கடந்த 2013ம் ஆண்டு ஷாருக்கானுடன் அவர் டேட்டிங்கில் இருந்தபோது டொரண்டோவில் ரகசிய திருமணம் செய்து கொண்டதாக தகவல் வெளியானது. ஆனால் அந்த தகவலை ஷாருக்கான் மறுத்து இருந்தார் என்பதும் பிரியங்கா சோப்ரா எப்போதுமே தனது தோழி என்று கூறி இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதுபற்றி பிரியங்காவிடம் கேட்டபோது, ‘நாங்கள் டேட்டிங்கில் இருந்தது உண்மைதான். ஆனால் திருமணம் வரை போகவில்லை’ என்றார். அந்த சமயத்தில் ஷாருக்கான், பிரியங்கா டேட்டிங் செய்வதாக மீடியா கூறியபோது, அதை இருவருமே மறுத்தனர். இப்போதுதான் முதல்முறையாக இந்த விஷயத்தை ஒப்புக்கொண்டிருக்கிறார் பிரியங்கா. இந்த நிலையில் கடந்த 2018ம் ஆண்டு அமெரிக்க பாடகர் மற்றும் நடிகர் நிக் ஜோன்ஸ் என்பவரை காதலித்த பிரியங்கா சோப்ரா, அதன்பின் அவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகள் வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொண்டனர்.

The post ஷாருக்கானுடன் டேட்டிங்கில் இருந்தது உண்மைதான்: பிரியங்கா சோப்ரா பகீர் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Related Stories: