ராஞ்சா படப்பிடிப்பு முடிந்தது

சென்னை: திருக்குமரன் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் சி.வி.குமார் மற்றும் ஸ்ரீக்ரிஷ் பிக்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் கி.சாம்பசிவம் இருவரும் இணைந்து தயாரித்துள்ள திரைப்படம் ‘ராஞ்சா’. இந்தப் படத்தில் பிரஜன், இவானா வருண், அதிரன் சதீஷ், பத்மன் மற்றும் அனுபமா குமார் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ‘ராஞ்சா’ படத்திற்கு ‘காலங்களில் அவள் வசந்தம்’ புகழ் ஹரி இசையமைக்க, கிஷோர் ராமச்சந்திரன் ஒளிப்பதிவு செய்கிறார்.

‘சூது கவ்வும்-2’ திரைப்படத்தின் எடிட்டர் அஷ்வின் ‘ராஞ்சா’ படத்தொகுப்பை கையாளுகிறார். காதலை மையமாகக் கொண்டு துப்பறியும் திரில்லர் படமாக உருவாகியிருக்கும் இந்த ‘ராஞ்சா’ படத்தை சந்தோஷ் ராவணன் இயக்கியுள்ளார். இதன் படப்பிடிப்பு இப்போது முடிவடைந்துள்ளது. விரைவில் படத்தின் டிரெய்லர் வெளியாகும் எனத் தெரிகிறது.

The post ராஞ்சா படப்பிடிப்பு முடிந்தது appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Related Stories: