திருக்காட்டுப்பள்ளி அருகே அரசு அனுமதி இன்றி டிராக்டரில் மணல் ஏற்றியவர் கைது

திருக்காட்டுப்பள்ளி, டிச.19: திருக்காட்டுப்பள்ளி அருகே அரசு அனுமதி இன்றி டிராக்டரில் மணல் ஏற்றி வந்தவரை போலீசார் கைது ெசய்தனர். திருக்காட்டுப்பள்ளி காவேரி நடுப்பாலத்தின் அருகே திருக்காட்டுப்பள்ளி இன்ஸ்பெக்டர் ஜெகதீஸ்வரன் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருக்கும் போது அவ்வழியாக வந்த ஒரு டிராக்டரை மறித்து ஆய்வு செய்தனர். அப்போது, அரசு அனுமதி இன்றி மணல் ஏற்றி வந்தது தெரிந்தது. அதையடுத்து, டிராக்டரை பறிமுதல் செய்து, அதை ஓட்டி வந்த திருக்காட்டுப்பள்ளி லைன் கரையைச் சேர்ந்த ஞானசேகர் மகன் திலகர்(30) என்பவரை கைது செய்தனர்.

The post திருக்காட்டுப்பள்ளி அருகே அரசு அனுமதி இன்றி டிராக்டரில் மணல் ஏற்றியவர் கைது appeared first on Dinakaran.

Related Stories: