குட்கா விற்ற கடைக்கு சீல்

தர்மபுரி, டிச.19: பென்னாகரம் உணவு பாதுகாப்பு அலுவலர் குமணன் மற்றும் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் திருப்பதி, அருண் ஆகியோர் கொண்ட குழுவினர், பென்னாகரம் தாலுகாவிற்கு உட்பட்ட பென்னாகரம், ஒகேனக்கல், நாகதாசம்பட்டி ஆகிய பகுதிகளில் உள்ள 30 கடைகளுக்கு மேல் ஆய்வு செய்தனர். இந்த ஆய்வில் நல்லானூர் கிராமத்தில் உள்ள ஒரு பெட்டிக்கடையில், ₹5 ஆயிரம் மதிப்புள்ள 1,800 கிராம் குட்கா மற்றும் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும், அந்த கடையை மூடி சீல் வைத்த அதிகாரிகள், கடை உரிமையாளருக்கு ₹25 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

The post குட்கா விற்ற கடைக்கு சீல் appeared first on Dinakaran.

Related Stories: