காஞ்சிபுரம், டிச.19: தமிழ்நாடு சாலை உள்கட்டமைப்பு மேம்பாட்டு கழகம் சார்பில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்வேறு சாலைகள் பல கோடி ரூபாய் மதிப்பீட்டில் இருவழி சாலைகளாக இருந்தது. தற்போது, நான்கு வழி சாலைகளாக மாறி உள்ளது. இதில், குறிப்பிடும்படி கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு வாலாஜாபாத் – வண்டலூர் சாலையில் ஒரகடம் சந்திப்பில் கட்டப்பட்ட மேம்பாலம், 22 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட காஞ்சிபுரம் – வந்தவாசி சாலையில் செவிலிமேடு அருகே பாலாற்று மேம்பாலம் என இரண்டு முக்கியத்துவம் வாய்ந்த சாலையாக பயன்பாட்டில் இருந்து வருகின்றன. மேலும், வண்டலூர் – வாலாஜாபாத் சாலை தற்போது நான்கு வழி சாலையில் இருந்து ஆறு வழிச்சாலையாக மாற்றப்பட்டு வருகிறது.
ஒரகடம் உயர்மட்ட பாலம் கனரக வாகனங்கள் அதிகம் சென்றதால், தற்போது பாலத்தின் பல்வேறு பகுதிகளில் தார் சாலை மற்றும் கான்கிரீட் சேதம் ஏற்பட்டு ஆபத்தான பயணம் மேற்கொள்ளும் வகையில் உள்ளதாக வாகன ஓட்டிகள் தெரிவிக்கின்றனர். மேலும், சேதமடைந்த பகுதிகளை அவ்வப்போது நெடுஞ்சாலை துறையினரும் பணிகளை மேற்கொண்டு சீரமைத்தும் வரும் நிலையில், மழைக் காலங்களில் மீண்டும் சேதம் ஏற்படுகிறது. இதனை தமிழ்நாடு சாலை கட்டமைப்பு மேம்பாட்டு கழகம் சரியாக அதிர்வுகள் மற்றும் சாலை பழுது நீக்கும் பணிகளை சரிவர செய்யாத நிலையில், தற்போது இப்பணிகள் அனைத்தும் மாநில நெடுஞ்சாலைத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது.
இப்பிரனைக்கு, நிரந்தரமாக தீர்வு காணும் வகையில் ஒரகடம் மேம்பாலம் மற்றும் செவிலிமேடு மேம்பாலங்களை ஐஐடி வல்லுனர் அப்பாராவ் நேற்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது, காஞ்சிபுரம் கோட்ட நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர், உதவி பொறியாளர் ஆகியோர், இச்சாலையில் பயணிக்கும் வாகனங்களின் எண்ணிக்கை, அதன் எடை, கடந்த காலத்தில் சேதம் ஏற்பட்ட நிலையில் அதற்காக மேற்கொண்ட பணிகள் குறித்தும், ஐஐடி வல்லுனருக்கு விளக்கம் அளித்து. ஆய்வு மேற்கொண்டனர்.
The post சேதமான பகுதிகளை சீரமைக்கும் வகையில் செவிலிமேடு மேம்பாலத்தில் ஐஐடி வல்லுநர் ஆய்வு appeared first on Dinakaran.