தொடர்ந்து பேருந்தில் வந்த பயணிகள், ஓட்டுநரிடம் சென்று செங்கல்பட்டில் இருந்து கிளாம்பாக்கம் செல்வதற்கு பேருந்து பயணச்சீட்டுக்கான கட்டணத்தை திருப்பி தருமாறு கேட்டுள்ளனர். அதற்கு, அரசு பேருந்து ஓட்டுநர் முறையாக பதில் அளிக்காமல் பயணச்சீட்டு கட்டணத்தைக்கேட்ட பயணிகளிடம் நாளை பேருந்து நிலையத்திற்கு வந்து கட்டணத்தை வாங்கி செல்லுமாறு கூறியுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த பயணிகள், ஓட்டுநருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து பயணிகளை சமாதானம் செய்த ஓட்டுநர், மாற்று பேருந்து மூலமாக அனைத்து பயணிகளையும் அனுப்பி வைத்தார். இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழ்நிலை நிலவியது.
The post பரனூர் சுங்கச்சாவடி அருகே பழுதாகி நின்ற இடைநில்லா அரசு பேருந்து appeared first on Dinakaran.