இவர்கள், நல்ல பாம்பு, கண்ணாடி விரியன், கட்டு விரியன், சுருட்டை வீரியன் உள்ளிட்ட பாம்பு வகைகளை பிடிக்கின்றனர். பிடித்து, வந்த பாம்புகளை மண்பானையில் அடைத்து வைத்து, பின்னர் ஒவ்வொரு பாம்பாக வெளியே எடுத்து விஷம் எடுக்கப்படுகிறது. ந்தாண்டு, 13 ஆயிரம் பாம்புகள் பிடிக்க அனுமதி வழங்கி, கடந்த 6 மாதங்களில் 960 கட்டுவீரியன், 4 ஆயிரம் சுருட்டை விரியன் என மொத்தம் 4960 பாம்புகள் பிடிக்கப்பட்டு விஷம் எடுக்கும் பணிகள் நடந்து வருகிறது. மேலும், நல்ல பாம்பு மற்றும் கண்ணாடி விரியன் பாம்புகளை பிடிக்க அனுமதி வழங்காமல், ஒன்றிய அரசு தொடர்ந்து முரண்டு பிடித்தது. இது குறித்து, கடந்த நவம்பர் 18ம் தேதி தினகரன் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது.
இதையடுத்து, கடந்த வாரம் ஒன்றிய அரசு அனுமதி கடிதத்தை தமிழ்நாடு அரசுக்கு அனுப்பி வைத்தது. இந்த நிலையில், ஒரு வாரத்துக்கு பிறகு தமிழ்நாடு அரசு வட நெம்மேலியில் இயங்கும் இருளர் பாம்பு பிடிப்போர் தொழில் கூட்டுறவு சங்கத்துக்கு கண்ணாடி விரியன் மற்றும் நல்ல பாம்புகளை பிடிக்க அனுமதி வழங்கி உள்ளது. வரும், 20ம் தேதி முதல் இருளர்கள் பிடித்து வரும் பாம்புகளை வாங்கும் பணி தொடங்கும் என பாம்பு பண்ணை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனால், இருளர் பாம்பு பிடிப்போர் தொழில் கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் மகிழ்ச்சி அடைந்து, செய்தி வெளியிட்ட தினகரன் நாளிதழுக்கு நன்றி தெரிவித்தனர்.
The post மாமல்லபுரம் அருகே பாம்பு பண்ணையில் கண்ணாடி விரியன், நல்ல பாம்பு பிடிக்க தமிழ்நாடு அரசு அனுமதி appeared first on Dinakaran.