முத்துப்பேட்டை, டிச. 18: முத்துப்பேட்டை ஒன்றியத்தில் உள்ள 48 அரசு தொடக்கப் பள்ளிகளுக்கு மாநில சமச்சீர் வளர்ச்சி நிதி திட்டத்தின் கீழ் ஸ்மார்ட் போர்டு கொடுக்கப்பட்டு திறன் வகுப்பறைகள் மேம்பாட்டு திறன் பயிற்சியானது ஆலங்காடு அரசு தொடக்கப்பள்ளியில் நேற்று நடைபெற்றது. இப்பயிற்சிக்கு வட்டார கல்வி அலுவலர்கள் சிவக்குமார், ராமசாமி ஆகியோர் தலைமை வகித்தனர்.
வட்டார வளமைய மேற்பார்வையாளர் இளையராஜா, பயிற்சி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதரன், ஆசிரியர் பயிற்சி நிறுவன விரிவுரையாளர் சரஸ்வதி மற்றும் ஸ்ரீதர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.பயிற்சியை மன்னார்குடி ஆசிரியர் பயிற்சி நிறுவன துணை முதல்வர் செல்வி துவங்கி வைத்து பேசினார். இதில் 48 அரசு தொடக்கப் பள்ளிகளை சார்ந்த தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டு திறன் வகுப்பறையில் மாணவர்களுக்கு நவீன யுக்திகளைக் கொண்டு ஸ்மார்ட் போர்டு பயன்படுத்தி எப்படி கல்வி கற்பிப்பது என்பது குறித்த பயிற்சியை எடுத்து கொண்டனர். கருத்தாளராக ஆசிரியர்களாக குணசீலன், விஜய் அமிர்தராஜ், கார்த்திக் ஆகியோர் செயல்பட்டார்.
The post முத்துப்பேட்டையில் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு திறன் வகுப்பறை கையாளும் பயிற்சி appeared first on Dinakaran.