ஊட்டி, டிச.18: ஊட்டி எட்டினஸ் சாலையில் கால்வாயில் செடிகள் வளர்ந்தும், குப்பைகள் நிறைந்தும் காணப்படுவதால் வாகனங்கள் கழிவுநீர் செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஊட்டி நகரின் முக்கிய சாலைகளில் ஒன்றாக எட்டின்ஸ் சாலை விளங்கி வருகிறது. இச்சாலை வழியாகவே அரசு பஸ்கள் சென்று வருகின்றன. இதுதவிர சேரிங்கிராஸ் மற்றும் ஏடிசி பகுதியில் இருந்து இத்தலார், அவலாஞ்சி உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல கூடிய தனியார் வாகனங்களும் இச்சாலை வழியாகவே சென்று வருகின்றன. சாலையில் நகராட்சி பூங்கா பகுதியில் இருந்து சுமார் 300 மீட்டர் தூரத்திற்கு வலது புறத்தில் கால்வாய் உள்ளது.
மழைக்காலங்களில் மழைநீர் மற்றும் கழிவுநீர் கால்வாயில் பெருக்கெடுத்து ஓடும். இதனிடையே இக்கால்வாய் முறையாக பராமாிக்கப்படாத நிலையில் இக்கால்வாயில் செடி கொடிகள் வளர்ந்துள்ளன. மேலும் மண் குவிந்துள்ள நிலையில் பிளாஸ்டிக் பாட்டில்கள், மதுபாட்டில்கள் மற்றும் உணவுகள், கழிவுகள் வீசி எறியப்பட்டு அசுத்தமாக காட்சியளிக்கிறது. இதனால் கழிவுநீர் செல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. மேலும் நிலத்தடி கால்வாயிலும் அடைப்பு ஏற்பட்டுள்ளது. எனவே இச்சாலை நகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள நிலையில் சாலையை சீரமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
The post ஊட்டி எட்டின்ஸ் சாலையில் குப்பைகள் நிறைந்து காணப்படும் கழிவுநீர் கால்வாய் appeared first on Dinakaran.