புதுக்கோட்டை,டிச.18: புதுக்கோட்டை பிருந்தாவன் அருகில் தேசிய ஓய்வூதியர் தின கருத்தரங்கு நடந்தது. இதற்கு மாவட்ட தலைவர் சரவணன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் ஜெயபாலன் ஓய்வூதியர் தின நோக்கங்கள் பற்றி பேசினார். மாநில செயலாளர் கருப்பையா சங்கங்கள் ஒன்றுபட்டுப் போராடியதால்தான் மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக ஓய்வூதியம் பெறமுடிந்தது என்றும் சங்கங்களின் கூட்டமைப்பு செயல்பாடுகளின்தான் வெற்றியைத் தேடித்தரும் என்றும் கூறினார்.
மாவட்டக்கருவூல அலுவலர் காந்திமதி 80 வயதான ஓய்வூதியர்களுக்கு பொன்னாடை அணிவித்து பாராட்டுரை வழங்கினார். முன்னாள் முதன்மைக்கல்வி அலுவலர் ராக்கம்மாள் 12 ஆண்டுகளுக்கு மேல் சங்கப்பணியாற்றி வரும் ஓய்வூதியர்களுக்கு நினைவுப்பரிசு வழங்கி பாராட்டி பேசினார். மாவட்ட இணைச்செயலாளர் சரஸ்வதி வரவேற்றார். மாவட்ட பொருளாளர் கிருஷ்ணன் நன்றி கூறினார்.
The post புதுக்கோட்டையில் தேசிய ஓய்வூதியர் தினம் கருத்தரங்கம் appeared first on Dinakaran.