தஞ்சாவூர், டிச. 18: தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையத்தில் 54 கடைகள் உள்ளன. அதில், ஒரு அறை அரசு போக்குவரத்து கழகத்திற்கும், மற்றொன்று தாய்மார்கள் பாலூட்டும் அறையாகவும் உள்ளன. மேலும், ஒரு கடை பயனிகளின் பொருட்கள் பாதுகாப்பு அறையாகவும் ஒதுக்கப்பட்டன. பழைய பேருந்து நிலையம் அருகில் பெரிய கோயில் எனும் பிரகதீஸ்வரர் கோயில், அரண்மை, சரஸ்வதி நூலகம் உள்ளிட்ட சுற்றுலா தலங்கள் உள்ளன.
அவைகளை சுற்றி பார்க்க வெளிநாடு, மற்றும் வெளி மாநிலங்கள், வெளி மாவட்டங்களில் இருந்தும் தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இவர்கள் பழைய பேருந்து நிலையத்தில் உள்ள பொருட்கள் பாதுகாப்பு அறையில் தங்கள் பொருட்களை வைத்து விட்டு செல்வது வழக்கம். ஆனால், அந்த பாதுகாப்பு அறை தற்போது தனியார் நபரால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு பேன்ஸி ஸ்டோராக செயல்பட்டு வருகிறது.
இதனால், சுற்றுலா பயணிகளும், பொது மக்களும் தங்கள் உடமைகளை சுமந்து சிரமமடைந்து வருகின்றனர். எனவே, ஆக்கிரமிப்பில் உள்ள பொருட்கள் பாதுகாப்பு அறையை மீட்டு, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் மற்றும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.
The post தஞ்சை பழைய பேருந்து நிலையத்தில் பொருட்கள் பாதுகாப்பு அறை ஆக்கிரமிப்பு appeared first on Dinakaran.