புதுக்கோட்டையில் தமிழ்மாநில விவசாய தொழிலாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்

 

புதுக்கோட்டை,டிச.18: உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் வழங்கிடும் முதியோர் உதவித் தொகை, பேறுகால உதவி தொகை, இயற்கை மரணம் உதவித்தொகை 2024 ஜூன் 23ம் தேதிக்கு பிறகு வழங்காமல் இருப்பதை உடனே வழங்கிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி புதுக்கோட்டையில் தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் குடியிருப்பு மனை இல்லாத அனைவருக்கும் இலவச மனை பட்டா வழங்கிட வேண்டும், விலைவாசி உயர்வை கட்டுப்படுத்திட வேண்டும், உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் வழங்கிடும் முதியோர் உதவித் தொகை, பேறுகால உதவி தொகை, இயற்கை மரணம் உதவித்தொகை 2024 ஜூன் 23ம் தேதிக்கு பிறகு வழங்காமல் இருப்பதை உடனே வழங்கிட வேண்டும், தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் 100 நாட்கள் வேலை செய்வதை உறுதிப்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 50-க்கும் மேற்பட்டோர் முழக்கங்களை எழுப்பினர்.

The post புதுக்கோட்டையில் தமிழ்மாநில விவசாய தொழிலாளர் சங்கம் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Related Stories: