இரவில் பனிப்பொழிவு இலைகள் உதிர்வதை தவிர்ப்பது எப்படி?

 

பெரம்பலூர், டிச. 18: இரவில் அதிக பனிப்பொழிவு நிலவுவதால் பருத்தியில் இலை உதிர்வினை தடுத்து அதிக மகசூல் பெற பெரம்பலூர் மாவட்ட வேளாண்மைத் துறை இணை இயக்குனர் ஆலோசனை வழங்கியுள்ளார். இது தொடர்பாக நேற்று வேளாண்மைத் துறை இணை இயக்குனர் பாபு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்திருப்பதாவது: பெரம்பலூர் மாவட்டத்தில் ஆடிப்பட்டத்தில் விதைப்பு செய்துள்ள பருத்தி மற்றும் மக்காச்சோளம் தற்போது அறுவடை நிலையில் உள்ளது.

விவசாயிகள் தங்களது நிலங்களில் விரைந்து அறுவடை மேற்கொண்டு தற்போது நல்ல விலை கிடைப்பதால் விற்று பயன்பெற வேண்டும். மேலும் பருத்தியில் இரவு நேரங்களில் அதிக பனிப்பொழிவு நிலவுவதால், இலைகள் சிவப்பு நிறமாக மாறி, இலைகள் உதிர்வு ஏற்படுகின்றன. இதனைத் தடுக்க மெக்னீசியம் சல்பேட் ஏக்கருக்கு 100 கிராம் மற்றும் 19:19:19 ஏக்கருக்கு ஒரு கிலோ விதம் கலந்து தெளித்து, இலை உதிர்வினை தடுத்து அதிக மகசூல்பெற வேண்டுமாய் கேட்டுக் கொள்ளப்படுகிறது என பெரம்பலூர் மாவட்ட வேளாண்மைத் துறை இணை இயக்குநர் பாபு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

The post இரவில் பனிப்பொழிவு இலைகள் உதிர்வதை தவிர்ப்பது எப்படி? appeared first on Dinakaran.

Related Stories: