விருதுநகர், டிச.18: விருதுநகர் மாவட்ட நூலக அலுவலர் வெளியிட்ட தகவல் வருமாறு: கன்னியாகுமரியில் 133 அடி உயர திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்டதன் வெள்ளி விழா கொண்டாட்டப்பட உள்ளது. டிச.23 முதல் 31ம் தேதி வரை விருதுநகர் மாவட்ட மைய நூலகத்தில் நூலக வாசகர் வட்டம் சார்பில் மாணவர்கள் மற்றும் நூலக வாசகர்களை கொண்டு திருக்குறள் கருத்தரங்கம், வினாடி வினா போட்டி, பேச்சுப்போட்டி, திருக்குறள் ஒப்புவித்தல் போட்டிகள் நடத்தப்பட உள்ளது. ஒவ்வொரு போட்டியிலும் முதல் பரிசாக தலா ரூ.5 ஆயிரம், 2ம் பரிசு ரூ.3 ஆயிரம், 3ம் பரிசு ரூ.2 ஆயிரம் வழங்கப்படும்.
போட்டிகளில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் பங்கேற்பு சான்றிதழ் வழங்கப்படும். விருப்பமுள்ள மாணவ, மாணவியர் டிச.22க்குள் dclvirudhunagar.in@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரி அல்லது 94876 36976 என்ற செல்போன் எண் மற்றும் விருதுநகர் மாவட்ட மைய நூலகத்திற்கு நேரடியாக வந்து போட்டி விபரத்தை தெரிந்து பெயர் பதிவு செய்யலாம் என தெரிவித்துள்ளார்.
The post மாணவர்களுக்கு திருக்குறள் போட்டி appeared first on Dinakaran.