விருதுநகர் மாவட்டத்தில் சாத்தூரில் ஏராளமான பட்டாசு தொழிற்சாலைகள் உள்ளன. இங்கு அவ்வப்போது வெடி விபத்துகள் ஏற்படுவதும் அதில் சிக்கி உயிரிழப்புகளும் நடக்கின்றன. இந்த துயரத்தை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. இந்த நிலையில் சாத்தூர் அருகே செவல்பட்டியில் தனியார் பட்டாசு ஆலை இயங்கி வருகிறது. இங்கு பயங்கர சத்தத்துடன் வெடி விபத்து ஏற்பட்டதால் சுற்றுவட்டார பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இந்நிலையில் ஆலைக்குள் பட்டாசுகள் தொடர்ந்து வெடித்து சிதறுவதால் உள்ளே செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் தொழிலாளர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இருப்பினும் கட்டிடத்தில் 2 அறைகள் முழுவதும் தரைமட்டமானது. பட்டாசு விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
The post விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து appeared first on Dinakaran.