சென்னை : தமிழகத்தின் பல மாவட்டங்களில் இன்று பிற்பகல் 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு மத்தியில் இந்த மழை எச்சரிக்கை வெளியிடப்பட்டுள்ளது. சென்னையில் பல இடங்களில் லேசான மழை பெய்து வருகிறது. போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளதால் வாகன ஓட்டிகள் கவனமாக இருக்க வேண்டும் என்று போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர்.இந்த மழை பொங்கல் பண்டிகைக்கு முன்பாக விவசாயிகளுக்கு நல்லது என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், நகர்ப்புறங்களில் மழைநீர் தேங்குதல் போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம் என்று அஞ்சப்படுகிறது. வானிலை ஆய்வு மையம் தொடர்ந்து கண்காணித்து வருவதாக தெரிவித்துள்ளது.
மேலும், 02-01-2026 முதல் 04-01-2026 வரை: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரிரு இடங்களில் 2-3° செல்சியஸ் இயல்பை விட குறைவாக இருக்கக்கூடும். சென்னையை பொறுத்தவரையில், 31-12-2025 மற்றும் 01-01-2026: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் குறைந்தபட்ச வெப்பநிலை பொதுவாக இயல்பை ஒட்டி இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும். 02-01-2026 முதல் 04-01-2026 வரை: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரிரு இடங்களில் 2-3° செல்சியஸ் இயல்பை விட குறைவாக இருக்கக்கூடும்.
நாளை தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகாலை வேளையில் ஒரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவலை தெரிவித்துள்ளது.
