சென்னை: தொழில்நுட்ப கோளாறு காரணமாக சென்னை மெட்ரோ ரயில் டிக்கெட்டை ஆன்லைனில் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. சர்வர் கோளாறை சரி செய்யும் பணிகள் நடைபெற்று வருவதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. அதுவரை கவுன்ட்டர்களில் டிக்கெட்டுகளை பெற்றுக்கொள்ள பயணிகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.