ஸ்ரீவில்லிபுத்தூர்: சதுரகிரி மலைக் கோயிலுக்கு பக்தர்கள் செல்ல வனத்துறை தடை விதித்தது. மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் பெய்து வரும் தொடர் மழையால் சதுரகிரி செல்லும் வழிப்பாதைகளில் வெள்ளபெருக்கு ஏற்பட்டது. வெள்ளப்பெருக்கு காரணமாக பாதுகாப்பு கருதி சதுரகிரி மலைக் கோயிலுக்கு பக்தர்கள் செல்ல தடை விதிக்கபப்ட்டுள்ளது. கார்த்திகை மாத பிரதோஷம், பவுர்ணமியை ஒட்டி பக்தர்கள் செல்ல வனத்துறை 4 நாட்கள் அனுமதி அளித்திருந்தது.
The post சதுரகிரி மலைக் கோயிலுக்கு செல்ல தடை appeared first on Dinakaran.