ஸ்ரீபெரும்புதூர்: வடகிழக்கு பருவமழை மற்றும் வங்கக்கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக ஸ்ரீபெரும்புதூர் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்தது. கனமழை காரணமாக, ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சி 12வது வார்டுக்கு உட்பட்ட ஜெமிநகர், விக்னேஷ்வரா நகர் ஆகிய பகுதிகளில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் தேங்கியதால் அப்பகுதி பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகினர். இதையடுத்து ஜெமிநகர், விக்னேஷ்வரா நகர் குடியிறுப்பு பகுதிகளில் தேங்கிய மழைநீரை மூன்று ராட்சச மோட்டார்கள் மூலம் ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சி நிர்வாகத்தினர் அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
இந்த பணியை ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சி தலைவர் சாந்திசதீஷ்குமார் பார்வையிட்டு ஆய்வு நடத்தினார். இந்த ஆய்வின்போது பேரூராட்சி செயல் அலுவலர் மோகனரங்கன், பொறியாளர் செண்பகவள்ளி உள்ளிட்ட பேரூராட்சி ஊழியர்கள் உடனிருந்தனர்.
The post ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சியில் குடியிருப்பு பகுதிகளில் தேங்கிய மழைநீர் அகற்றம் appeared first on Dinakaran.