வரும் 18ம் தேதி முதல் ஆவினில் கிரீன் மேஜிக் ப்ளஸ் பால் அறிமுகம்

சென்னை: தமிழ்நாடு முழுவதும் தினமும் ஆவின் மூலம் சுமார் 31 லட்சம் லிட்டர் பால் மற்றும் மாதம் ஒன்றுக்கு சுமார் ரூ.50 கோடி மதிப்பிலான பால் உபபொருட்கள் பொதுமக்களுக்கு எவ்வித தங்குதடையுமின்றி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆவின் பாலகங்கள், சில்லரை விற்பனையாளர்கள் மூலம்மக்களின் தேவை அறிந்து ஆவின் பால், பால் உபபொருட்கள் விநியோகம் செய்யப்படுகிறது. மேலும், பொதுமக்களின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், ஆவின் நிறுவனம் புதிய பால் மற்றும் பால் உபபொருட்களை அறிமுகம் செய்து வருகிறது. இந்நிலையில் பொதுமக்களின் விருப்பத்திற்கு ஏற்பவும், ஆரோக்கியத்திற்கு ஏற்ற வகையில் வைட்டமின் ஏ மற்றும் டி செறிவூட்டப்பட்ட புதுவகை கிரீன் மேஜிக் ப்ளஸ் பால் காஞ்சிபுரம், திருவள்ளூர், கோயம்புத்தூர் மற்றும் சேலம் ஒன்றியங்களில் 18ம் தேதி முதல் அறிமுகம் செய்ய உள்ளதாக ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

The post வரும் 18ம் தேதி முதல் ஆவினில் கிரீன் மேஜிக் ப்ளஸ் பால் அறிமுகம் appeared first on Dinakaran.

Related Stories: