அதேபோல் வேலூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, அரிசி, துவரம் பருப்பு, பாய், போர்வை, டவல், வேட்டி சேலை, பிஸ்கட், சர்க்கரை, சமையல் எண்ணெய் உள்பட மளிகை தொகுப்புகள் என மொத்தம் ரூ.12 லட்சத்து 44 ஆயிரத்து 650 மதிப்புள்ள 10 டன் நிவாரண பொருட்கள் வழங்கப்படுகிறது.
மேலும் துணி வகைகள், இதர நிவாரண பொருட்கள் 2300 அனுப்ப தயார் செய்யப்பட்டிருந்தது. இந்த பொருட்கள் லாரியில் ஏற்றி நேற்று கலெக்டர் அலுவலகத்தில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டது.
நிவாரண பொருட்கள் ஏற்றிச்சென்ற லாரியை கலெக்டர் சுப்புலட்சுமி கொடியசைத்து தொடங்கி வைத்தார். உடன் மேயர் சுஜாதா, கமிஷனர் ஜானகி, மண்டலக்குழு தலைவர் நரேந்திரன், சுகாதார அலுவலர் சிவகுமார் மற்றும் அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
The post வேலூரில் இருந்து விழுப்புரம் மாவட்டத்திற்கு ₹12.44 லட்சம் நிவாரண பொருட்கள் அனுப்பி வைப்பு appeared first on Dinakaran.