கிருஷ்ணகிரி புறநகர்ப் பகுதிகளில் சிறுத்தை நடமாட்டம் உள்ளதாக வனத்துறை எச்சரிக்கை

கிருஷ்ணகிரி: ஜாகிர் வெங்கடாபுரம் அடுத்த குல்நகரில் சிறுத்தை நடமாட்டம் உள்ளதாக வனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த 2 நாட்களுக்கு முன் சிறுத்தை நடமாட்டம் உறுதி செய்யப்பட்டுள்ளதால் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்கவும் அறிவுறுத்தப்பட்டது.

கிருஷ்ணகிரி, அதிகளவில் வனப்பகுதிகளை கொண்ட மாவட்டமாகும். அங்குள்ள வனப்பகுதிகளில் யானைகள், கரடி, சிறுத்தை போன்ற வன விலங்குகள் உள்ளன. இந்த விலங்குகள் அவ்வப்போது வனத்தை விட்டு குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைவது வழக்கமாக உள்ளது.

அவ்வாறு நேற்று இரவு கிருஷ்ணகிரி பகுதியான ஜாகிர் வெங்கடாபுரம் அடுத்த குல்நகர், அதியமான் நகர் போன்ற அதிகளவில் குடியிருப்புகள் மற்றும் அரசு பள்ளி உள்ள பகுதிகளில் சிறுத்தை நடமாடியுள்ளது. இது தொடர்பான சிசிடிவி காட்சிகளும் வெளியாகியுள்ளது. சிறுத்தை நடமாட்டம் குறித்து அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர். இதையடுத்து சிறுத்தையை கண்காணித்து, அதனை அடர்ந்த வனபகுதிக்குள் கொண்டு செண்டு விட வேண்டும் என்று வனத்துறைக்கு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து ஆய்வு செய்த வனத்துறையினர், சிறுத்தை நடமாட்டம் உள்ளதை உறுதி செய்தனர். மேலும் வனத்துறையினர் கண்காணிப்பு பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர். அப்பகுதி மக்கள் பாதுகாப்பாக இருக்கவும் வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

The post கிருஷ்ணகிரி புறநகர்ப் பகுதிகளில் சிறுத்தை நடமாட்டம் உள்ளதாக வனத்துறை எச்சரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: