தமிழ்நாடு மோட்டார் வாகனம் பராமரிப்புத் துறை இயக்குநரகம், 20 அரசு தானியங்கி பணிமனைகள் செயல்பாடுகளை கணினி மயமாக்குதல் திட்டத்தை துவக்கி வைத்தார் அமைச்சர் சிவசங்கர்

சென்னை: தமிழ்நாடு மோட்டார் வாகனங்கள் பராமரிப்புத் துறையால் அனைத்து அரசுத்துறை வாகனங்களுக்கு தேவையான பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் உள்ள அரசுத் துறை ஊர்திகளுக்கு தேவையான பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள மோட்டார் வாகனப் பராமரிப்புத் துறையின் 20 மாவட்ட தலைநகரங்களில் அரசு தானியங்கி பணிமனைகள் உருவாக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன.

தமிழக முதலமைச்சரின் வழிகாட்டுதல்களின்படி, போக்குவரத்துத் துறை அமைச்சர் சட்டப் பேரவை மானிய கோரிக்கை எண்.48-ல் அறிவித்தபடி, தமிழ்நாடு மோட்டார் வாகனங்கள் பராமரிப்புத் துறையின் “இயக்குநரகம் மற்றும் 20 அரசு தானியங்கி பணிமனைகளின் செயல்பாட்டை கணினிமயமாக்குதல்” திட்டத்திற்கு ரூ.2,37,31,000/- (ரூபாய் இரண்டு கோடி முப்பத்தியேழு லட்சத்து முப்பத்து ஒன்றாயிரம் மட்டும்) செலவில் உரிய நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, அரசாணைகள் வெளியிடப்பட்டுள்ளன. அதன் அடிப்படையில் “இயக்குநரகம் மற்றும் 20 அரசு தானியங்கி பணிமனைகளின் செயல்பாட்டை கணினிமயமாக்குதல்” திட்டம் நிறைவேற்றப்பட்டு, தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் தலைமைச் செயலகத்தில் இன்று 11.12.2024 துவக்கி வைக்கப்பட்டது.

இதன் மூலம், அரசு வாகனங்களை பணிமனையில் அனுமதித்து, பணிமேற்கொண்டு விடுவித்தல், மின்கலம், உருளைகள் மாற்றுதல் மற்றும் வாகனங்களை கழிவு நீக்கம் செய்தல், எரிபொருள் பட்டியல் தயாரித்தல் முதலிய பணிகளை இணைய வழி மூலம் செயல்படுத்தவும், வாகனம் உபயோகிக்கும் அலுவலர்கள் வாகனப் பராமரிப்பிற்கான வேண்டுகோளை இணையவழி அனுப்பவும் மற்றும் வாகனம் அனுமதித்தல், விடுவித்தல் போன்ற நிகழ்வுகளை ஊர்தி அலுவலருக்கு மின்னஞ்சல் / குறுஞ்செய்தி மூலம் தெரிவிப்பதற்கும் ஏதுவாக, இதற்கான கணினி மென்பொருள் தயாரிக்கப்பட்டும், தேவையான கணினி உபகரணங்கள் கொள்முதல் செய்யப்பட்டும், இத்திட்டம் நிறைவு பெற்றுள்ளது. இத்திட்டத்தை மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் அவர்களால் காணொலி காட்சி மூலம் இன்று 11.12.2024 துவக்கி வைக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் போக்குவரத்துத் துறை, அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் கே.பணீந்திர ரெட்டி, இ.ஆ.ப., மோட்டார் வாகன பராமரிப்புத் துறை இயக்குநர் கொ.செந்தில்வேல் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post தமிழ்நாடு மோட்டார் வாகனம் பராமரிப்புத் துறை இயக்குநரகம், 20 அரசு தானியங்கி பணிமனைகள் செயல்பாடுகளை கணினி மயமாக்குதல் திட்டத்தை துவக்கி வைத்தார் அமைச்சர் சிவசங்கர் appeared first on Dinakaran.

Related Stories: