சென்னை: பொது இடத்தில் உள்ள அனைத்துக் கட்சி கொடி மரங்களை அகற்ற ஏன் உத்தரவு பிறப்பிக்கக்கூடாது ? என ஐகோர்ட் மதுரைக் கிளை கேள்வி எழுப்பி உள்ளது. மதுரை கூடல்புதூரில் அதிமுக கொடி மரம் வைக்க அனுமதி கோரி வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் நீதிமன்றமே தாமாக முன்வந்து தமிழ்நாடு காவல்துறை தலைவரை எதிர்மனுதாரராக சேர்த்து ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது. கட்சி கொடி மரங்களால் ஏற்பட்ட விபத்து, பதியப்பட்ட வழக்கு விவரங்களை டிஜிபி தாக்கல் செய்ய உத்தரவிட்டதுடன் அதிமுக கொடி மரம் வைக்க அனுமதி கோரிய வழக்கில் கட்சி கொடி மரங்களை ஏன் அகற்ற கூடாது எனவும் ஐகோர்ட் கிளை கேள்வி எழுப்பியுள்ளது.
The post கட்சி கொடி மரங்களை ஏன் அகற்ற கூடாது?: ஐகோர்ட் கிளை கேள்வி appeared first on Dinakaran.