நிலக்கோட்டை, டிச.11: நிலக்கோட்டை அருகே ராமராஜபுரம் பகுதியைச் சேர்ந்தவர் முனியாண்டி (70). இவர் நேற்று முன்தினம் முருகன் என்பவரது தோட்டத்தில் இருந்த அகத்தி மரங்களை அகற்றிக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக மரத்தின் உச்சி பகுதி, மேலே சென்று கொண்டிருந்த மின்சார வயரில் உரசியது. இதில் மின்சாரம் தாக்கியதில் முனியாண்டி தூக்கி வீசப்பட்டார்.
உடனடியாக அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு வாடிப்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அதனைத் தொடர்ந்து மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இது குறித்து விளாம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் சர்மிளா வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
The post நிலக்கோட்டை அருகே மின்சாரம் தாக்கி கூலி தொழிலாளி பலி appeared first on Dinakaran.