பண்டிகை கால பரிசு பொருட்கள், அலங்கார பொருட்களை வாங்கும் வகையில் ஷாங்காயில் பல்வேறு சிறப்பு விற்பனை கூடங்கள் திறக்கப்பட்டுள்ளன. கடைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளதால் நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. தைவான் தலைநகர் தைபேவையும் கிறிஸ்துமஸ் உற்சாகம் தொற்றி கொண்டுள்ளது. கடை தெருக்களும், கட்டடங்களும், நடைப்பாதைகளும் லட்ச கணக்கான மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. தைபேயில் உள்ள பொழுதுபோக்கு மையங்களில் குவிந்த ஏராளமான மக்கள் கிறிஸ்துமஸ் தாத்தா போல் வேடமணிந்த நாய்கள் குதிரைகளுடன் உற்சாகமாக செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.
கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி ஜப்பானிலும் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வாடிக்கையாளர்களை கவரும் விதமாக வர்த்தக நிறுவனங்கள், ஒளிரூட்டப்பட்ட பிரமாண்டமான கிறிஸ்துமஸ் மரங்களை நிறுவியுள்ளன. டோக்கியோ நகரம் முழுவதும் கிறிஸ்துமஸ் உற்சாகம் நிரப்பி வழிகிறது. ஒளி வெள்ளத்தில் மிதக்கும் பூங்காக்களில் குடும்ப குடும்பமாக திரளும் மக்கள் இரவு நேரத்தை செலவிட்டு வருகின்றனர்.
பிலிப்பைன்ஸ் நாட்டில் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி முக்கிய கட்டடங்கள், தெருக்கள், பூங்காக்கள் அலங்கரிக்கப்பட்டுள்ளன. பிலிப்பைன்ஸ் நகரத்தில் உள்ள பூங்காவில் இயேசு நாதர் அவதரித்த காட்சி வண்ண விளக்குகளை கொண்டு சித்தரிக்கப்பட்டுள்ளன. கிறிஸ்துமஸ் நெருங்கி வரும் நிலையில் பல்வேறு நாடுகளில் மக்களிடம் பண்டிகை கால உற்சாகம் பன்மடங்கு அதிகரித்துள்ளது.
The post உலகம் முழுவதும் களைகட்டும் கிறிஸ்துமஸ் பண்டிகை: முக்கிய நகரங்கள், பூங்காக்கள் விழாக்கோலம் பூண்டன!! appeared first on Dinakaran.