அதிக இடங்களை பெற்றதால் முதலமைச்சர் பதவியை விட்டு தருமாறு பாஜக அளித்த நெருக்கடிக்கு பணிந்த ஏக்நாத் ஷிண்டே முதலமைச்சர் பதவியை தேவேந்திர பட்னாவிஸ்-க்கு விட்டுக்கொடுக்க நேரிட்டது. ஏக்நாத் ஷிண்டேவும், அஜித் பவாரும் துணை முதல்வர்களாக பதவியேற்றனர். இந்த நிலையில், முதல்வர் பதவியை விட்டுக்கொடுத்ததால் உள்துறை, வருவாய், பொதுப்பணி, நகர்ப்புற மேம்பாடு உள்ளிட்ட முக்கிய அமைச்சரவைகளை தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என்று ஏக்நாத் ஷிண்டே வலியுறுத்தி வருகிறார்.
57 இடங்களை வென்றுள்ள தனது கட்சிக்கு 11 முதல் 13 அமைச்சர் பதவிகளை தரவேண்டும் என்பதில் ஷிண்டே பிடிவாதமாக உள்ளதாக தகவல்களை கூறுகின்றன. அஜித்பவார் தனது கட்சிக்கு நிதியமைச்சர் பதவியை கோருவதாக தெரிகிறது. நேற்று முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸை சந்தித்த ஏக்நாத் ஷிண்டேவும், அஜித் பவாரும் முக்கிய இலாகாக்களை ஒதுக்குமாறு மீண்டும் வலியுறுத்தி உள்ளனர். ஷிண்டேவும், பவாரும் கோரும் துறைகளின் மீது பாஜகவும் கண் வைத்துள்ளதால் முதலமைச்சரும், துணை முதலமைச்சர்களும் பதவியேற்று 5 நாட்களாகியும் மகாராஷ்டிராவில் ஒதுக்கீடு செய்வதில் இழுபறி நீடிக்கிறது.
The post மகாராஷ்டிராவில் இலாகா ஒதுக்கீடு செய்வதில் இழுபறி: முக்கிய துறைகளை ஒதுக்குமாறு ஏக்நாத் ஷிண்டே அழுத்தம் appeared first on Dinakaran.