தற்போது வரை சந்தேகத்திற்கிடமான வகையில் எதுவும் கிடைக்கவில்லை. தொடர்ந்து சோதனை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் டெல்லியில் மேலும் சில பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன்படி மதர் மேரிஸ் பள்ளி, பிரிட்டிஷ் பள்ளி, சல்வான் பப்ளிக் பள்ளி, கேம்பிரிட்ஜ் பள்ளி உள்ளிட்ட 40 பள்ளிகளுக்கு இன்று இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளதாக டெல்லி போலீசார் தெரிவித்தனர். அடுத்தடுத்த வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதால், முன்னெச்சரிக்கையாக மாணவர்கள் பள்ளியில் இருந்து வீடுகளுக்கு திருப்பி அனுப்பப்பட்டதாக பள்ளி நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.
The post டெல்லியில் 40 தனியார் பள்ளிக்கு இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல்: முன்னெச்சரிக்கையாக வீடுகளுக்கு திருப்பி அனுப்பப்பட்ட மாணவர்கள் appeared first on Dinakaran.