வேதாரண்யம், டிச.9: வேதாரண்யம் தாலுக்கா தேத்தாக்குடி தெற்குஊராட்சியில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் தாலுகா தேத்தாகுடி தெற்கு ஊராட்சியில் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டம் மற்றும் பாரதப் பிரதமர் திட்டத்தில் வீடு கட்டும் திட்டம்,சிறப்பு தணிக்கை சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் வனஜா சண்முகம் தலைமை வகித்தார். ஊராட்சி மன்ற துணைத் தலைவர் அழகேசன் வரவேற்றார்.கூட்டத்தில்ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் கிராம மக்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் ஊராட்சியில் பாரதப் பிரதமர் திட்டத்தில் வீடு கட்டும் திட்டத்தை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுப்பது,ஊராட்சியில் வரவு செலவுகளை சிறப்பு தணிக்கை செய்வது ,100 நாள் திட்டத்தில் பணிகளை தேர்வு செய்தல் உள்ளிட்ட பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது.கூட்ட முடிவில் ஊராட்சி செயலாளர் வீரபாண்டியன் நன்றி கூறினார்.
The post தேத்தாக்குடி தெற்குஊராட்சியில் சிறப்பு கிராம சபை கூட்டம் appeared first on Dinakaran.