திருச்சி வந்த ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயிலில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டுவரப்பட்ட ₹75 லட்சம் பணத்தை பறிமுதல் செய்த ரயில்வே பாதுகாப்பு படை

திருச்சி: திருச்சி ஜங்சன் ரயில் நிலையத்தில் ஹவுராவிலிருந்து சென்னை வழியாகவந்த ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயில் இன்று அதிகாலை 2.45 மணியளவில் திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தை வந்தடைந்தது. ரயில்வே பாதுகாப்புபடை ஆய்வாளர் செபாஸ்டின் மற்றும் குற்றவியல் காவல்ஆய்வாளர் ரமேஷ் ஆகியோர் தலைமையில் போலீசார் சோதனை மேற்கொண்டனர்.

பிளாட்பார்ம் நம்பர் 6ல் வந்த ரயிலிலிருந்து காலை 3மணியளவில் சுரங்கப்பாதை வழியாக நடந்து வந்துகொண்டிருந்த பயணியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதையடுத்து, சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையை சேர்ந்த வேதமாணிக்கம் என்பவரது மகன் ஆரோக்கியதாஸ் (49) அணிந்துவந்த கருப்புநிற தோள்பையை ரயில்வே பாதுகாப்புபடை போலீசார் சோதனை நடத்தினர்.

இதில் 500 ரூபாய், 200ரூபாய் நோட்டுகள் கட்டுகட்டாக ஹவாலா பணம் இருந்ததைக்கண்டு அதிர்ச்சியடைந்தனர். பணத்திற்கான உரிய ஆவணங்கள் இல்லாதநிலையில், 75லட்சம் ஹவாலா ரொக்க பணத்தையும் ரெயில்வே பாதுகாப்புபடை போலீசார் பறிமுதல்செய்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை வருமானவரித்துறை துணைஇயக்குநர் ஸ்வேதா முன்னிலையில் வருமானவரித்துறையினரிடம் ஒப்படைத்ததுடன், ஹவாலா பணத்தை கடத்திவந்த குற்றவழக்கில் தொடர்புடைய ஆரோக்கியதாஸ் மீது வழக்குபதிவுசெய்து சிறையில் அடைத்தனர்.

The post திருச்சி வந்த ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயிலில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டுவரப்பட்ட ₹75 லட்சம் பணத்தை பறிமுதல் செய்த ரயில்வே பாதுகாப்பு படை appeared first on Dinakaran.

Related Stories: