தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டம்

 

தேனி, டிச. 7: தேனி மாவட்ட டாஸ்மாக் மேலாளர் அலுவலகம் முன்பாக தொழிலாளர் சங்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு டாஸ்மாக் தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் கோபாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் மாரிமுத்து மாவட்ட பொருளாளர் அய்யப்பன் முன்னிலை வகித்தனர்.

இதில் ஏஐடியுசி மாவட்ட பொதுச் செயலாளர் ராஜ்குமார், மாவட்ட பொருளாளர் சென்றாய பெருமாள், சிபிஐ தாலுகா செயலாளர் அரசகுமாரன், ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கம் மாவட்டச் செயலாளர்பிரவேந்திரன் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட டாஸ்மாக் தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

The post தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Related Stories: