நாகப்பட்டினம் கடையில் ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள புகையிலை பொருட்கள் பறிமுதல்

நாகப்பட்டினம், டிச.5: நாகப்பட்டினத்தில் ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள புகையிலை பொருட்களை உணவு பாதுகாப்பு துறையினர் கைப்பற்றினர். நாகப்பட்டினம் மருந்துகொத்தளம் ரோடு பகுதியில் உள்ள கடைகளில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் புஷ்பராஜிக்கு தகவல் வந்தது. இதையடுத்து அவரது உத்தரவின்பேரில் நாகப்பட்டினம் நகராட்சி உணவு பாதுகாப்பு அலுவலர் அன்பழகன் மற்றும் திருமருகல் வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் ஆண்டனிபிரபு ஆகியோர் ஆய்வு நடத்தினர்.

அப்போது அங்கு ஒரு கடையில் அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் (கூல் லிப்) விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டது. இவற்றின் மதிப்பு ரூ.30 ஆயிரம் ஆகும். இதை உணவு பாதுகாப்பு துறையினர் கைப்பற்றினர். அந்த கடையை பூட்டி சீல் வைக்கப்பட்டது. மாநில உணவு பாதுகாப்பு ஆணையரின் உத்தரவுப்படி இதே நபர் மீது மூன்றாம் முறையாக நடந்த குற்றம் என்பதால் ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்படுவதோடு, 3 மாதங்கள் கடை பூட்டப்படும் என உணவு பாதுகாப்புதுறை அதிகாரிகள் உத்தரவிட்டனர்.

The post நாகப்பட்டினம் கடையில் ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள புகையிலை பொருட்கள் பறிமுதல் appeared first on Dinakaran.

Related Stories: