சிவகங்கை, டிச. 4: பள்ளிக் குழந்தைகளை பள்ளி வாகனம் மற்றும் தனியார் வாகனங்களில் அதிகமாக ஏற்றினால் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவித்துள்ளதாவது:சிவகங்கை மாவட்ட நிர்வாகம் சார்பில் மாவட்டத்தில் உள்ள குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பை உறுதி செய்யும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
குழந்தை திருமணம், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். அனைத்து பள்ளிகளிலும் குழந்தைகளுடைய பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் புகார் பெட்டி வைத்தும் (கருத்து சுதந்திர பெட்டி) அதில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலக தொலைபேசி எண் 04575-240166 மற்றும் குழந்தைகளுக்கான இலவச தொலைபேசி எண் 1098 ஆகியவை எழுதி வைக்க வேண்டும்.
பள்ளி தலைமையாசிரியர்கள் தினசரி இறைவணக்க கூட்டத்தின் போது குழந்தைகளுக்கு பாதுகாப்பு குறித்த அறிவுரை வழங்கிட வேண்டும். தனியார் வாகனங்களில் பள்ளி குழந்தைகளை அதிகமாக ஏற்றிச்செல்லும் வாகன உரிமையாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post வாகனங்களில் பள்ளிக்குழந்தைகளை அதிகமாக ஏற்றினால் நடவடிக்கை appeared first on Dinakaran.