சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தின விழா பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட தனியார் திருமண மண்டபத்தில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், அனைத்து நாடுகள் மாற்றுத்திறனாளிகள் தின விழா நேற்று நடைபெற்றது. இதில், கைத்தறி மற்றும் துணிநூல்துறை அமைச்சர் ஆர்.காந்தி கலந்துகொண்டு, மாவட்ட அளவில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ – மாணவிகளுக்கு பரசு மற்றும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கி, மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பாக சேவை செய்த மருத்துவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களையும் வழங்கினார். பின்பு, மாற்றுத்திறனாளி குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகளை பார்வையிட்டார்.

இதனைத்தொடர்ந்து, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 11 மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு ரூ.1.44 லட்சம் மதிப்பிலான உதவி உபகரணங்கள் மற்றும் எஸ்பிஐயின் சமூக செயலாற்றுகிற பொறுப்பின் கீழ் இந்திய செயற்கை அவயங்கள் உற்பத்தி கழகம் (அலிம்கோ) மூலம் 132 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.20.42 லட்சம் மதிப்பிலான உதவி உபகரணங்கள் என மொத்தம் 143 மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு ரூ.21.86 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சர் ஆர்.காந்தி வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன், உத்திரமேரூர் எம்எல்ஏ க.சுந்தர், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் படப்பை மனோகரன், காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ், மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் நித்தியா சுகுமார், காஞ்சிபுரம் ஒன்றிய குழு தலைவர் மலர்க்கொடி குமார், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் மலர்விழி, உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

The post சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தின விழா பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் appeared first on Dinakaran.

Related Stories: