நண்பர்களிடம் சவால் விட்டு குளத்தில் குதித்த வாலிபர் பலி

மாதவரம்: அயனாவரம் வசந்தா கார்டன் தெருவைச் சேர்ந்தவர் பாலமூர்த்தி. இவரது மகன் பாபி (எ) பிரசாந்த் (27). இவர், இறுதி சடங்கிற்கு மேளம் அடிக்கும் வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம் வில்லிவாக்கம் தாதங்குப்பம் பகுதியில் இறப்பு வீட்டிற்கு வந்து, தனது நண்பர்களுடன் சேர்ந்து மேளம் அடித்துக் கொண்டு சுடுகாட்டிற்கு சென்றுள்ளார். மீண்டும் திரும்பி இறப்பு நடந்த வீட்டிற்கு வந்து, அருகில் உள்ள தாதங்குப்பம் குளத்தில் மாலையில் குளிக்க சென்றுள்ளனர். அப்போது, பிரசாந்த் மற்றும் அவரது நண்பர்கள் 6 பேர் இருந்துள்ளனர்.

பிரசாந்த் குளத்தில் குதித்து இந்த கரையிலிருந்து மறு கரைக்கு செல்கிறேன் பார் என தனது நண்பர்களிடம் கூறிவிட்டு குதித்துள்ளார். தண்ணீரில் இறங்கியவர் வெகு நேரமாகியும் வெளியே வரவில்லை. மேலும் அவர் குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சடைந்த அவரது நண்பர்கள் உடனடியாக ராஜமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் வில்லிவாக்கம் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்புத்துறை யினர் சம்பவ இடத்திற்கு வந்து பிரசாந்தின் உடலை மீட்டனர். பிறகு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

The post நண்பர்களிடம் சவால் விட்டு குளத்தில் குதித்த வாலிபர் பலி appeared first on Dinakaran.

Related Stories: