நீர்வரத்து வினாடிக்கு 3,440 கன அடியாகவும், வெளியேற்றம் வினாடிக்கு 27 கன அடியாகவும் உள்ளது. சோழவரம் ஏரியின் மொத்த கொள்ளளவான 1081 மி.கன அடியில் தற்போது தண்ணீர் இருப்பு 157 மி.கன அடியாக உள்ளது. நீர்வரத்து வினாடிக்கு 223 கன அடியாக உள்ளது. புழல் ஏரியின் மொத்த கொள்ளளவான 3,300 மி.கன அடியில் தற்போது, தண்ணீர் இருப்பு 2,763 மி.கன அடியாக உள்ளது. நீர்வரத்து வினாடிக்கு 730 கன அடியாகவும், சென்னை மாநகர மக்களின் குடிநீருக்காக வினாடிக்கு 209 கன அடி தண்ணீரும் அனுப்பி வைக்கப்படுகிறது. கண்ணன்கோட்டை ஏரியின் மொத்த கொள்ளளவான 500 மி.கன அடியில் தற்போது தண்ணீர் இருப்பு 325 மி.கன அடியாக உள்ளது.
நீர்வரத்து வினாடிக்கு 15 கன அடியாக உள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த கொள்ளளவான 3,645 மி.கன அடியில் தற்போது தண்ணீர் இருப்பு 2,792 மி.கன அடியாக உள்ளது. நீர்வரத்து வினாடிக்கு 751 கன அடியாகவும், சென்னை மாநகர மக்களின் குடிநீருக்காக வினாடிக்கு 102 கன அடி தண்ணீரும் அனுப்பி வைக்கப்படுகிறது. மொத்தத்தில் திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையின் காரணமாக மொத்தக் கொள்ளளவான 11,757 மி.கன அடியில் தற்போது 7,248 மி.கன அடியாக நீர் இருப்பு உள்ளதாக நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
* நிரம்பி வழியும் தடுப்பணைகள்
ஊத்துக்கோட்டை மற்றும் அதை சுற்றியுள்ள ஆந்திர மாநிலமான நாகலாபுரம், நந்தனம், பிச்சாட்டூர் பகுதிகளில் பெஞ்சல் புயல் காரணமாக கடந்த சில நாட்களாக பெய்த தொடர் மழையால் ஆந்திர மாநிலம் பிச்சாட்டூர் அணை நிரம்பியது. இந்த அணையில் மொத்தம் 4 மதகுகள் உள்ளன. இதில் ஒரு மதகின் வழியாக வினாடிக்கு 500 கனஅடி வீதம் திறக்கப்பட்டு பின்னர் படிப்படியாக உயர்த்தப்படும் என தெரிவிக்கப்பட்ட நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு கூடுதலாக 2200 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.மேலும் பிச்சாட்டூர் அணைக்கு மழைநீர் வினாடிக்கு 3000 கனஅடி வீதம் வந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் ஆரணியாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் சுருட்டப்பள்ளி தடுப்பணையிலும், ஊத்துக்கோட்டை பேரூராட்சி சிட்ரபாக்கம் தடுப்பணையிலும் தண்ணீர் நிரம்பி வழிகிறது. சுற்று வட்டார பகுதி மக்கள் தடுப்பணையில் குளித்தும், மீன் பிடித்தும் மகிழ்ச்சியில் உள்ளனர்.
The post சென்னை மக்களின் குடிநீர் ஆதாரமாக இருக்கும் ஏரிகளின் நீர்மட்டம் அதிகரிப்பு: மாவட்டத்தில் 7,248 மி.கன அடி நீர் இருப்பு; நீர்வளத்துறை அதிகாரிகள் தகவல் appeared first on Dinakaran.